முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் வரவேற்பு


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் வரவேற்பு
x
தினத்தந்தி 22 May 2021 12:04 AM IST (Updated: 22 May 2021 12:04 AM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் வரவேற்பு அளித்தனர்.

விராலிமலை, மே.22-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் ஆய்வுக்கூட்டத்தை முடித்து விட்டு காரில் புறப்பட்டு திருச்சிக்கு வருகை தந்தார். அப்போது, வரும் வழியில்
புதுக்கோட்டை மாவட்ட எல்லையான விராலிமலை தாலுகா லஞ்சமேட்டில் அவருக்கு அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, தி.மு.க. மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் ஆகியோர் புத்தகம் வழங்கி வரவேற்பு அளித்தனர். அப்போது, முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் காரில் இருந்தபடியே மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள மற்றும் கலெக்டரிடம் கேட்டறிந்தார். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, விராலிமலை தாசில்தார் சதீஸ், சரவணகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தி.மு.க. இலக்கிய அணி துனண பொறுப்பாளர் தென்னலூர் பழனியப்பன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story