பட்டாசு உற்பத்தி செய்த 3 பேர் கைது


பட்டாசு உற்பத்தி செய்த 3 பேர் கைது
x
தினத்தந்தி 22 May 2021 1:17 AM IST (Updated: 22 May 2021 1:17 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசியில் விதியை மீறி ஆலையில் பட்டாசு உற்பத்தி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிவகாசி, 
சிவகாசி சித்துராஜபுரம்-விளாம்பட்டி ரோட்டில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் அரசின் உத்தரவை மீறி பட்டாசு தயாரிக்கப்படுவதாக வந்த தகவலை தொடர்ந்து வருவாய்த்துறையினர் திடீர் ஆய்வு செய்து பட்டாசு ஆலைக்கு சீல் வைத்தனர். இது தொடர்பாக ஆனையூர் கிராமநிர்வாக அலுவலர் பாண்டியராஜன் கொடுத்த புகாரின் பேரில் மாரனேரி போலீசார் வழக்குபதிவு செய்து பட்டாசு ஆலையில் இருந்த வைரமணி (வயது 29) என்பவரை கைது செய்தனர். இதேபோல் போடுரெட்டியப்பட்டி பகுதியில் ஒரு பட்டாசு ஆலையில் விதியை மீறி பட்டாசு உற்பத்தி செய்யப்பட்டது. அந்த ஆலைக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர். இது குறித்து மாரனேரி கிராம நிர்வாக அலுவலர் மனோகரன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் மாரனேரி போலீசார் அந்த ஆலையில் இருந்த ரவி (31), பெரியாண்டவர் (30) ஆகியோரை கைது செய்தனர்.

Next Story