காய்கறி-விளைபொருட்களின் விலை குறைவு


காய்கறி-விளைபொருட்களின் விலை குறைவு
x

பணவீக்கத்தின் மாற்றத்தால் காய்கறி - விளைபொருட்களின் விலை குறைந்துள்ளது என பொருளியல் நிபுணர் தெரிவித்துள்ளார்.

விருதுநகர், 
பணவீக்கத்தின் மாற்றத்தால் காய்கறி - விளைபொருட்களின் விலை குறைந்துள்ளது என பொருளியல் நிபுணர் தெரிவித்துள்ளார். 
பணவீக்கம் 
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
ஏப்ரல் மாதத்திற்கான மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கத்தினை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
 2021 மார்ச் மாதத்தில் 7.3 சதவீதமாக இருந்த மொத்த விலை பணவீக்கம் விகிதம் கடந்தமாத இறுதியில் 10.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஒரே மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 3.8 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 4.17 சதவீதமாக இருந்ததோடு ஒப்பிட்டு பார்த்தால் இரண்டே மாதத்தில் 6.32 சதவீதம் மொத்த விலை பணவீக்கம் உயர்ந்துள்ளது.
மொத்தவிலை 
 இதையே கடந்த ஆண்டு நிலையோடு ஒப்பிட்டுப் பார்த்தால் 9.91 சதவீதம் அளவிற்கு பணவீக்கம் அதிகரித்துள்ளது.
 2020 ஏப்ரலில் மொத்த விலை பணவீக்கம் 0.58 சதவீதமாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது. அது தற்போது இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு பொருளையும் தனித்தனியாக பார்த்தால் ஏப்ரல் மாதத்தில் நுகர்வோர் பணவீக்கம் வீதமானது 4.92 சதவீதமாக அதிகரித்துள்ளது. எரிபொருள் மற்றும் மின்சார பணவீக்கம் 20.9 4 சதவீதமாக உயர்ந்துள்ளது.
பருப்பு வகைகள் 
இது இதற்கு முந்தைய மாதத்தில் 10.2 சதவீதமாக இருந்துள்ளது. தற்போது அது இரண்டு மடங்கிற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. பெட்ரோலிய பணவீக்க சதவீதம் 42.37 சதவீதமாகவும், டீசலின் பணவீக்க சதவீதம் 33.32 சதவீதமாகவும் உள்ளது.
 மொத்த விலை பணவீக்கம் குறியீட்டில் முக்கிய இடம் வகிக்கும் உற்பத்திப் பொருட்களின் பணவீக்கம் ஆனது 7.34 சதவீதத்தில் இருந்து 9.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசின் புள்ளிவிபரங்களின்படி உணவுப் பொருட்களில் பருப்பு வகைகள், பழங்கள் உள்ளிட்ட பொருட்களின் பணவீக்கம் அதிகரித்துள்ளது.
இயற்கை எரிவாயு 
 பருப்பு வகைகளின் பணவீக்க விகிதம் 10.7 சதவீதம், பழங்கள் மீதான பணவீக்கம் 21.4 சதவீதம், பாலின் பணவீக்க சதவீதம் 2.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. உணவுப்பொருட்கள் அல்லாத பணவீக்க விகிதம் 15.58 சதவீதமாக அதிகரித்துள்ளது. உணவு அல்லாத பொருட்களில் எண்ணெய் வித்துகளின் பணவீக்க சதவீதம் 29.9 சதவீதமாக உயர்ந்துள்ளது.
 கனிமப்பொருட்களின் பணவீக்கவிகிதம் 19.6 சதவீதமாகவும், கச்சா பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு பணவீக்க சதவீதம் 79. 56 சதவீதமாகவும் உள்ளது.
குறைவு 
 காய்கறி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் மீதான மொத்த பணவீக்க சதவீதம் மட்டுமே கடந்த மாதம் குறைந்துள்ளது. காய்கறியின் பணவீக்க சதவீதம் 9.23 சதவீதமாக குறைந்துள்ளது.
 இதில் உருளைக்கிழங்கின் பணவீக்க சதவீதம் 30.4 சதவீதமாகவும், வெங்காயத்தின் பணவீக்கம் 19.72 சதவீதமாகவும், தானியங்களின் பணவீக்கம் 3.32 சதவீதமாகவும், நெல் மீதான பணவீக்கம் 0.92 சதவீதம் ஆகவும், கோதுமை மீதான பணவீக்க சதவீதம் 3.2 சதவீதமாகவும் குறைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக மொத்த விலை பணவீக்கம் 2021 ஏப்ரலில் 9.3 சதவீதமாக இருக்கும் என்று பொருளாதார வல்லுனர்கள் கணித்து இருந்தனர்.
ஆனால் கணிப்பையும் மீறி 10.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனால் நடப்பு மே மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் சதவீதம் மேலும் உயர்ந்து 13 முதல் 13.5 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story