பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கொள்ளிடம் டோல்கேட்,
திருச்சி மலைக்கோட்டை வாசல் ஜான் தோப்பு பகுதியை சேர்ந்த பத்மநாபன்-சகுந்தலா தம்பதியின் மகள் மதுமிதா (வயது 15). இவர் சத்திரம் பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த மதுமிதா கடந்த சில நாட்களுக்கு முன்பு சிகிச்சைக்காக தனது தாய் மற்றும் தங்கையுடன் திருச்சி நம்பர் 1 டோல்கேட் அருகே மணக்கொள்ளை பகுதியிலுள்ள தனது தாத்தா ஆறுமுகம் வீட்டிற்கு வந்தார். அங்கு வயிற்று வலியால் அவதிப்பட்ட மதுமிதா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவலறிந்த கொள்ளிடம் நம்பர் 1 டோல்கேட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் மதுமிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து கொள்ளிடம் நம்பர் 1 டோல்கேட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story