திருக்குறுங்குடியில் ஊரடங்கை மீறிய 7 பேர் கைது


திருக்குறுங்குடியில் ஊரடங்கை மீறிய 7 பேர் கைது
x
தினத்தந்தி 22 May 2021 1:45 AM IST (Updated: 22 May 2021 1:45 AM IST)
t-max-icont-min-icon

திருக்குறுங்குடியில் ஊரடங்கை மீறிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஏர்வாடி, மே:
திருக்குறுங்குடி மாவடி, மலையடிபுதூர் ஆகிய பகுதிகளில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஊரடங்கை மீறி அத்தியாவசிய காரணம் இன்றி மோட்டார் சைக்கிள்களில் வந்த மலையடிபுதூர் பருத்திவிளை தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ஆண்டி பெருமாள் (வயது 24), மாவடி ராமச்சந்திராபுரத்தை சேர்ந்த ராமர் மகன் மகேஷ், திருக்குறுங்குடியை சேர்ந்த சுந்தரராஜன் (69), தெற்கு மாவடியை சேர்ந்த ஆத்திமுத்து மகன் வாசகராஜ் (24), சூரங்குடியை சேர்ந்த முருகன் (47), களக்காடு குடில்தெருவை சேர்ந்த பொன்னுத்துரை (38), வள்ளியூர் அண்ணாநகரை சேர்ந்த செல்லத்துரை மகன் தர்மராஜா (30) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Next Story