சுரண்டையில் வெல்டிங் பட்டறைக்கு சீல் வைப்பு


சுரண்டையில் வெல்டிங் பட்டறைக்கு சீல் வைப்பு
x
தினத்தந்தி 22 May 2021 2:12 AM IST (Updated: 22 May 2021 2:12 AM IST)
t-max-icont-min-icon

சுரண்டையில் வெல்டிங் பட்டறைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

சுரண்டை, மே:
சுரண்டை பஜார் பகுதியில் உதவி திட்ட அலுவலர் சங்கரநாராயணன், சுரண்டை நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் வெங்கட கோபு, வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார், சுரண்டை வருவாய் ஆய்வாளர் மாரியப்பன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இப்ராகிம் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர்கள் கடைக்காரர்களிடம், கடைகளுக்கு வருபவர்களிடம் முககவசம் அணிந்து சமூக இடைவெளி கடைபிடிக்க அறிவுறுத்த வேண்டும். முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு பொருட்கள் வழங்கக்கூடாது. வாடிக்கையாளர்களை மொத்தமாக பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ள அறிவுறுத்த வேண்டும் என்பன போன்றவற்றை எடுத்துக்கூறினர்.   இதற்கிடையே, சிவகுருநாதபுரம் பகுதியில்  தனியாருக்கு சொந்தமான ஒரு வெல்டிங் பட்டறை செயல்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அதிகாரிகள் அங்கு சென்று விதிமுறையை மீறி செயல்பட்ட வெல்டிங் பட்டறையை பூட்டி ‘சீல்’ வைத்து ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். 

Next Story