புளியங்குடியில் கொரோனா பேரிடர் மையம்- சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
புளியங்குடியில் கொரோனா பேரிடர் மையத்தை சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
புளியங்குடி, மே:
புளியங்குடி நகர த.மு.மு.க சார்பில் மாவட்ட தலைவர் முகமது யாகூப் ஆலோசனையின் பேரில் கொேரானா பேரிடர் சேவை மையம் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு த.மு.மு.க. நகர தலைவர் செய்யது அலி பாதுஷா தலைமை தாங்கினார். டாக்டர் சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ பேரிடர் மையத்தை திறந்து வைத்து பேசினார். நிகழ்ச்சியில் ம.ம.க. மாவட்ட செயலாளர் பஷீர் ஒலி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் செய்யது சுலைமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ம.ம.க. நகர துணைச் செயலாளர் மைதின் அப்துல் நன்றி கூறினார்.
சிவகிரி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர் சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், “அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் மற்றும் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவேன்” என்றார். வாசுதேவநல்லூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் பொன் முத்தையா பாண்டியன், புளியங்குடி நகர செயலாளர் சாகுல், புளியங்குடி நகர ம.தி.மு.க. செயலாளர் ஜாகிர் உசேன், வாசுதேவநல்லூர் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story