கொரோனா நிதி வழங்கிய பள்ளி மாணவன்


கொரோனா நிதி வழங்கிய பள்ளி மாணவன்
x
தினத்தந்தி 22 May 2021 2:39 AM IST (Updated: 22 May 2021 2:39 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா நிதி வழங்கிய பள்ளி மாணவன் ரூ.2 ஆயிரம் அனுப்பினான்

குளித்தலை
கரூர் மாவட்டம், குளித்தலை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சுந்தர். சமூக ஆர்வலரான இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி சுகன்யா. துறையூரில் உள்ள வங்கி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஷியாம் கிருஷ்ணா (வயது 7), சித்தார்த் கிருஷ்ணா(2) ஆகிய இரண்டு மகன்கள். ஷியாம்கிருஷ்ணா தனியார் பள்ளி‌ ஒன்றில் 2-ம்‌ வகுப்பு படித்து வருகிறான். இச்சிறுவன் தனது ஜூனியர் அக்கவுண்டில் பணம் சேமித்த வந்தான். தான் சேமித்து வைத்த பணத்தில் தனது தம்பியின் பிறந்தநாள் அன்று அவனுக்கு பரிசு வாங்கித் தருவதாக எண்ணியிருந்தான். ஆனால், அந்த பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்க முன் வந்தான். தனது விருப்பத்தை பெற்றோரிடம் தெரிவித்தான். இதனை கேட்டு மகிழ்ச்சி அடைந்த அவர்கள் அவனது உதவும் நோக்கத்தை கண்டு பெருமிதம் அடைந்தனர். பின்னர் அந்த தொகையை நேற்று முன்தினம் தனது தம்பி பிறந்தநாள் அன்று தனது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.2 ஆயிரத்து 22-ஐ தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதிக்கு ஷியாம்கிருஷ்ணா அனுப்பி வைத்தான். மேலும் முதல்-அமைச்சர் ஸ்டாலின் அங்கிள், பாதுகாப்பாக பணி செய்யுங்கள், கொரோனா இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என கூறினான்.


Next Story