திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்த வேண்டும்; அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு


திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்த வேண்டும்; அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 21 May 2021 9:53 PM GMT (Updated: 21 May 2021 9:53 PM GMT)

திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் ஜான் லூயிஸ் உத்தரவிட்டார்.

கொரோனா தொற்றால் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் பாட்டைத்தெரு, தென் மாடவீதி, பாடசாலை தெரு போன்ற பகுதிகளில் மொத்தம் 19 பேர் சில தினங்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 3 பேர் சிகிச்சை முடித்து வீடு திரும்பினர். இந்த நிலையில்.திருக்கழுக்குன்றம் பேரூராட்சி அலுவலர் திருஞானசம்பந்தம் மேற்பார்வையில் மேற்கூறிய 3 தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வெளியாட்கள் மற்றும் வாகனங்கள் வராதபடி தடுப்புகள் அமைக்கப்பட்டது. தவிர பேரூராட்சியின் அனைத்துப்பகுதிகளிலும் 2 வாகனங்கள் மூலம் கொரோனா தொற்றை தடுக்க கிருமிநாசினி, பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது.

கலெக்டர் ஆய்வு
இந்த பணிகளை பார்வையிட செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் நேற்று காலை திருக்கழுக்குன்றம் வருகை தந்தார். அவருடன் வருவாய் ஆர்.டி. ஓ. சுரேஷ், தாசில்தார் துரைராஜன் மற்றும் அதிகாரிகள் வந்தனர். பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த கலெக்டர் ஜான் லூயிஸ் பேரூராட்சி நிர்வாக அலுவலர் வீடுகள் தோறும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை் பற்றிய கணக்கெடுப்பு நடத்தவும் சுகாதார பணிகளை தொடர்ந்து கண்காணிக்கவும் உத்தரவிட்டார்.

Next Story