10 நாட்களுக்கு பிறகு சென்னை- சேலம் விமான சேவை நாளை மீண்டும் தொடக்கம்
10 நாட்களுக்கு பிறகு சென்னை- சேலம் இடையே விமான சேவை நாளை மீண்டும் தொடங்கப்படுகிறது.
ஓமலூர்:
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா 2-வது அலையால் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழகத்திலும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் விமான பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. மேலும் ஊரடங்கு காரணமாக சென்னை-சேலம், சேலம்-சென்னை விமான சேவை கடந்த 13-ந் தேதி முதல் இன்று (சனிக்கிழமை) வரை ரத்து செய்வதாக ட்ரூஜெட் நிறுவனம் அறிவித்தது.
இந்தநிலையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் மீண்டும் சென்னை- சேலம், சேலம்-சென்னை இடையே விமான சேவை தொடங்கப்பட உள்ளது. அதாவது சென்னையில் இருந்து காலை 7.15 மணிக்கு விமானம் புறப்பட்டு சேலத்துக்கு 8.15 மணிக்கு வந்து சேரும். பின்னர் சேலத்தில் இருந்து காலை 8.35 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு 9.35 மணிக்கு சென்று அடையும்.
இந்த தகவலை சேலம் விமான நிலைய இயக்குனர் ரவீந்திரபெருமாள் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story