ஆத்தூர் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறிய 180 பேர் மீது வழக்கு
ஆத்தூர் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறிய 180 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஆத்தூர்:
ஆத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு இமானுவேல் ஞானசேகரன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர்கள் உமாசங்கர், சிவக்குமார் மற்றும் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சகாதேவன் ஆகியோர் ஆத்தூர், நரசிங்கபுரம் பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஊரடங்கு உத்தரவை மீறி மோட்டார் சைக்கிள்களில் எவ்வித காரணம் இன்றி சுற்றித்திரிந்ததாக மொத்தம் 180 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் 29 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல ஆத்தூர், நரசிங்கபுரம் பகுதிகளில் முககவசம் அணியாத 25 பேருக்கு நகராட்சி அதிகாரிகள் தலா ரூ.200 அபராதம் விதித்தனர்.
Related Tags :
Next Story