கொரோனா உதவி மையமாக மாறிய பள்ளிவாசல்


கொரோனா உதவி மையமாக மாறிய பள்ளிவாசல்
x
தினத்தந்தி 22 May 2021 8:43 PM IST (Updated: 22 May 2021 8:43 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா உதவி மையமாக மாறிய பள்ளிவாசல்

கோவை

கோவை மாவட்டத்தில் தினமும் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் கல்லூரிகள், பள்ளிகள் ஆகியவை கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டு வருகிறது. 


கோவை கரும்புக்கடையில் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பு சார்பில் ஹுதா பள்ளிவாசல் நடத்தப்பட்டு வருகிறது. இது, கொரோ னாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் மையமாக மாற்றப்பட்டு உள்ளது. 

இது குறித்து ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் மக்கள் தொடர்பு செயலாளர் அப்துல் ஹக்கீம் கூறுகையில், கொரோனா குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், உதவும் வகையிலும் ஹுதா பள்ளிவாசல் உதவும் மையமாக மாற்றப்பட்டுள்ளது. 

இங்கு மருத்துவம் மற்றும் உளவியல் ஆலோசனை, டாக்டர்களுடன் கலந்துரையாடல், படுக்கை, ஆக்சிஜன் வசதிகள், முதல்-அமைச்சர் காப்பீடு திட்ட வழிகாட்டுதல், இலவசமாக முக கவசம், உணவு வினியோகம் உள்ளிட்ட பணிகள் செய்யப்படும் என்றார்.

Next Story