கோவை கடை வீதிகளில் அலைமோதிய கூட்டம்
கோவை கடை வீதிகளில் அலைமோதிய கூட்டம்
கோவை
தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு நாளைமுதல் ஒருவாரத்துக்கு அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்பாக 2 நாட்கள் மட்டும் அனைத்து கடைகளும் திறக்கலாம் என்கிற அறிவிப்பும் வெளியானது.
இதனால் கோவை டவுன்ஹால், பெரியகடைவீதி, காந்திபுரம், சிங்காநல்லூர், ஆர்.எஸ்.புரம், சரவணம்பட்டி, சுந்தராபுரம் | பகுதிகளில உள்ள மளிகை கடைகள், காய்கறி கடைகள், பெட்டி கடைகள் என அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன.
மேலும் கடைகள் திறக்கும் அறிவிப்பை கண்ட பொதுமக்களும் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடை வீதிக்கு சென்று ஆர்வம் காட்டினர். இதனால் கடை வீதிகளில் கூட்டம் அலைமோதியது.
இதனால் காய்கறி கடைகளில் அதிக எண்ணிக்கையில் கூட்டம் காணப்பட்டது. ஒருவாரத்துக்கு தேவையான காய்கறிகளை பொதுமக்கள் பைகளில் வாங்கி சென்றனர். மளிகை கடைகளிலும் அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது.
இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) கடைகள் திறந்து இருக்கும் என்பதால் கோவை கடைவீதிகளில் அதிக எண்ணிக்கையில் கூட்டம் கூடும். மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து பொருட்களை வாங்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story