கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஊரக வளர்ச்சித்துறை முதன்மை பொறியாளர் ஆய்வு
கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஊரக வளர்ச்சித்துறை முதன்மை பொறியாளர் ஆய்வு செய்தார்.
தேனி:
தேனி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்து ஊரக வளர்ச்சித்துறையின் முதன்மை பொறியாளர் ஹரிகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். இதற்காக சென்னையில் இருந்து நேற்று அவர் தேனி வந்தார். மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அவர் ஆய்வு செய்தார். நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை தீவிரப்படுத்தவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். மேலும் கிராமங்களில் காய்ச்சல் மற்றும் ஆக்சிஜன் அளவு பரிசோதனை செய்யும் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டார். பின்னர் தேனி ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய கண்காணிப்பு அலுவலர்களுக்கு நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு அவர் தலைமை தாங்கி பல்வேறு அறிவுரைகள் வழங்கினார். இந்த ஆய்வின் போது ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story