ஒட்டன்சத்திரம் பகுதியில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் உள்பட 2 பேர் பலி
ஒட்டன்சத்திரம் பகுதியில் நிகழ்ந்த வெவ்வேறு சம்பவங்களில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் உள்பட 2 பேர் பலியாகினர்.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் பகுதியில் நிகழ்ந்த வெவ்வேறு சம்பவங்களில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் உள்பட 2 பேர் பலியாகினர்.
மின்சாரம் பாய்ந்தது
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் குறிஞ்சிநகரை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் அருள்முருகன் (வயது 35). இவர் நேற்று முன்தினம் தனது வீட்டின் அருகே இருந்த தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்து கொண்டிருந்தார்.
அப்போது மரத்தின் அருகில் இருந்த மின்கம்பத்தின் மின்கம்பி அருள்முருகன் மீது பட்டது. இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்த நிலையில், மரத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் சம்பவ இடத்திலேயே அருள்முருகன் பரிதாபமாக இறந்துபோனார்.
சிறுவன் பலி
இதேபோல் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தும்மிச்சம்பட்டியை சேர்ந்தவர் சரவணகுமார். இவரது மகன் தாமோதரகண்ணன் (16). இவன் அப்பகுதியில் உள்ள தனியார் ஒலிபெருக்கி நிறுவனத்தில் வேலை செய்து வந்தான்.
இந்தநிலையில் தாமோதரகண்ணன் நேற்று முன்தினம் அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த மின்கம்பி அவன் மீது எதிர்பாராதவிதமாக பட்டது. இதில் அவன் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துபோனான்.
இந்த 2 வெவ்வேறு சம்பவங்கள் குறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story