ஒட்டன்சத்திரத்தில் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் வழங்கிய ஆசிரியை
ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த ஆசிரியை கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் வழங்கினார்.
சத்திரப்பட்டி:
ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட ஏ.பி.பி.நகரை சேர்ந்தவர் செல்லம்மாள் (வயது 62). இவர் அரசுப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இந்தநிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் நிவாரண நிதி வழங்கும்படி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதைத்தொடர்ந்து ஏராளமானோர் நிவாரண நிதி வழங்கி வருகின்றனர். இதனால் செல்லம்மாளும் கொரோனா நிவாரண நிதி வழங்க முடிவு செய்தார். அதன்படி, அவர் முதல்-அமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் வழங்கினார். இதற்கான காசோலையை ஒட்டன்சத்திரம் தாசில்தார் சசியிடம் நேற்று செல்லம்மாள் வழங்கினார்.
Related Tags :
Next Story