தியாகதுருகம் அருகே மோட்டார் சைக்கிள் பாறையில் மோதல் மேளகலைஞர்கள் 2 பேர் பலி
தியாகதுருகம் அருகே மோட்டார் சைக்கிள் பாறையில் மோதல் மேளகலைஞர்கள் 2 பேர் பலி
கண்டாச்சிமங்கலம்
தியாகதுருகம் அருகே ரிஷிவந்தியத்தைச் சேர்ந்த ஜான் பீட்டர் மகன் ஆரோக்கிய ஜேம்ஸ்(வயது 20), அதே பகுதியைச் சேர்ந்த சவுரியப்பன் மகன் அந்தோணி ஆரோக்கிய ஜாண்சன்(18). மேள கலைஞர்களான இவர்கள் இருவரும் சம்பவத்தன்று தியாகதுருகம் அருகே குன்னியூர் கிராமத்தில் நடைபெற்ற விழாவில் மேளம் அடிப்பதற்காக சென்றனர்.
பின்னர் விழா முடிந்ததும் சக மேளகலைஞரான குன்னியூர் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் சதீஷ்(21) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் ரிஷிவந்தியம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை ஆரோக்கிய ஜேம்ஸ் ஓட்டினார். குன்னியூர் ஏரிக்கரை வளைவில் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் ஏரியில் உள்ள பாறையில் மோதியது. இதில் ஆரோக்கிய ஜேம்ஸ், அந்தோணி ஆரோக்கிய ஜாண்சன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். சதீஷ் லேசான காயம் அடைந்தார். இவர்கள் 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே ஆரோக்கிய ஜேம்ஸ் பரிதாபமாக இறந்தார். அந்தோணி ஆரோக்கிய ஜாண்சன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். சதீஷ் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். விபத்து குறித்து தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story