திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய உச்சமாக மேலும் 757 பேருக்கு கொரோனா


திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய உச்சமாக மேலும் 757 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 22 May 2021 11:05 PM IST (Updated: 22 May 2021 11:05 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய உச்சமாக நேற்று மேலும் 757 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. தொற்றுக்கு 2 பேர் உயிரிழந்தனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய உச்சமாக நேற்று மேலும் 757 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. தொற்றுக்கு 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஊரடங்கு

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

எனினும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. மேலும் தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. 

போலீசார், வருவாய் துறையினர், சுகாதார துறையினர் இணைந்து ஊரடங்கு உத்தரவுகளை கண்காணித்து வருகின்றனர். 

மேலும் பல்வேறு பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசிகளும் போடப்பட்டு வருகிறது. 

757 பேருக்கு கொரோனா

இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 757 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதுமட்டுமின்றி 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளனர். 

மாவட்டத்தில் நேற்று வரை 34 ஆயிரத்து 461 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 28 ஆயிரத்து 383 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

தற்போது 5 ஆயிரத்து 700 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 378 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளனர்.

Next Story