பெண்கள் உள்பட மேலும் 25 பேர் பலி


பெண்கள் உள்பட மேலும் 25 பேர் பலி
x
தினத்தந்தி 22 May 2021 11:08 PM IST (Updated: 22 May 2021 11:08 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்தில் 364 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 10 பெண்கள் உள்பட 25 பேர் சிகிச்சை பலனின்றி பலியானார்கள்.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டத்தில் 364 பேருக்கு ேநற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 10 பெண்கள் உள்பட 25 பேர் சிகிச்சை பலனின்றி பலியானார்கள்.
364 பேர் புதிதாக பாதிப்பு
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவல் வேகம் அதிகமாகி உள்ளது..
நேற்று மட்டும் 364 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். இவர்களுடன் ேசர்த்து, இதுவரை மாவட்டத்தில் 14 ஆயிரத்து 154 பேர் கொரோனால் பாதிக்கப்பட்டனர். 
நேற்று சிகிச்சை முடிந்து 151 பேர் வீடு திரும்பினர். இதுவரை 10 ஆயிரத்து 790 பேர் குணம் அடைந்து உள்ள நிலையில் தற்போது 3 ஆயிரத்து 185 பேர் சிகிச்சையில் உள்ளனர். 
25 பேர் உயிரிழப்பு
ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 10 பெண்கள் உள்பட 25 பேர் ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளதாக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ஒரே நாளில் ராமநாதபுரத்தை சேர்ந்த 25 பேர் கொரானாவுக்கு பலியாக இருப்பதாக அரசு தெரிவித்து இருப்பது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Next Story