கொரோனா தடுப்பூசி முகாம்


கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 22 May 2021 11:11 PM IST (Updated: 22 May 2021 11:11 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

கீழக்கரை, 
கொரோனா 2-வது அலை பரவி வரும் நிலையில் கீழக்கரை தெற்குத்தெரு ஜமாஅத் அருகில் நவாஸ்கனி எம்.பி. மற்றும் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் வலியுறுத்தலின்பேரில் கொரோனா தடுப்பூசி முகாம் நடை பெற்றது. முகாமில் 117 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். தெற்குத் தெரு ஜமாஅத் தலைவர் உமர் களஞ்சியம் தலைமை தாங்கினார். கீழக்கரை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், நகராட்சி பொறுப்பு ஆணையர் பூபதி, தெற்கு தெரு ஜமாஅத் செயலாளர் சயீது இபுராகிம், உதவி செயலாளர் பரிதா சுபேர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவர் ராசிக்தீன் மற்றும் சுகாதாரத்துறை உதவியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் வக்கீல் ஹமீது சுல்தான் செய்திருந்தார்.

Next Story