மாவட்ட செய்திகள்

புதுச்சத்திரம் அருகே கல்லூரி மாணவி தற்கொலை + "||" + girl student suicide

புதுச்சத்திரம் அருகே கல்லூரி மாணவி தற்கொலை

புதுச்சத்திரம் அருகே கல்லூரி மாணவி தற்கொலை
புதுச்சத்திரம் அருகே கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்டார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள குருசாமிபாளையம் பகுதியை சேர்ந்தவர் மணி. கூலித்தொழிலாளி. இவரது மகள் காயத்ரி (வயது 21). இவர் ராசிபுரம் அருகே உள்ள ஆண்டகளூர் கேட் அரசு கலைக்கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த அவர், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த காயத்ரி வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதையடுத்து அவரது பெற்றோர் காயத்ரியை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காயத்ரி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை
செங்கத்தில் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
2. கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை; அதிர்ச்சியில் தந்தையும் சாவு
கல்லூரி சேர்க்கை விவகாரத்தில் தந்தையுடன் ஏற்பட்ட மோதலால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த அதிர்ச்சியில் தந்தை மாரடைப்பால் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
3. பரமத்தி அருகே பெற்றோர் திட்டியதால் கொதிக்கும் எண்ணெயை உடலில் ஊற்றி கல்லூரி மாணவி தற்கொலை
பரமத்தி அருகே பெற்றோர் திட்டியதால் கொதிக்கும் எண்ணெயை உடலில் ஊற்றி கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
4. கோவையில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
கோவையில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
5. கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை
பொள்ளாச்சி அருகே காதலன் இறந்த துக்கம் தாங்காமல் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.