110 வழித்தடங்களில் பஸ்கள் இயக்கம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் 110 வழித்தடங்களில் அரசு புறநகர் மற்றும் நகர பேருந்துகள் நாளை அதிகாலை 4 மணிவரை இயக்கப்படுகின்றன.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் 110 வழித்தடங்களில் அரசு புறநகர் மற்றும் நகர பேருந்துகள் நாளை அதிகாலை 4 மணிவரை இயக்கப்படுகின்றன.
முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு 2 வார காலத்திற்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது தெரிந்ததே. இந்த ஊரடங்கு நாளை 24- ந் தேதியுடன் முடிவடையும் நிலையில் மேலும் ஒரு வார காலத்திற்கு தளர்வில்லா முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
அதற்கு முன்னதாக பொதுமக்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ளும் வகையில் நேற்றும், இன்றும் அனைத்து கடைகள் உள்ளிட்டவைகள் திறந்து இருக்கும் என்றும் மாநிலத்திற்குள் அனைத்து அரசு மற்றும் தனியார் போக்குவரத்து நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.
இதை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று மாலை 4 மணி முதல் பஸ் போக்குவரத்து தொடங்கியது. நகர் பேருந்தை பொருத்தவரையில் மாவட்டத்திற்குள் ஒருசில டவுன் பஸ்கள் இயக்கப்பட்டன. இதேபோல் புறநகர் பேருந்துகளில் சென்னை மதுரை திருச்சி என மொத்தம் 5 பஸ்கள் இயக்கப்பட்டன. திடீரென அறிவிக்கப்பட்டதால் இந்த பஸ்களில் பயணிகள் கூட்டம் இன்றி வெறிச்சோடி சென்றன.
வழித்தடங்கள்
இயக்குவதற்காக தயார் நிலையில் கொண்டுவரப்பட்ட பஸ்களும் பயணிகள் வராததால் காத்துகிடந்தன. இன்று அதிகாலை 3 மணி முதல் புறநகர் மற்றும் நகர பேருந்துகள் அனைத்து வழித்தடங்களிலும் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறையினர் தெரிவித்தனர். புறநகர் வழித்தடங்களில் 49 வழித்தடங்களில் 49 பஸ்கள் அனைத்து வழித்தடங்களில் இயக்கப்படும்.
மேலும் நகர் பேருந்துகளை பொருத்தவரையில் 61 வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (திங்கட்கிழமை) காலை 4 மணி வரை இந்த பேருந்து இயக்கம் நடைபெறும் என்று போக்குவரத்து புறநகர் மேலாளர் தனபால், நகர் பேருந்து மேலாளர் தெய்வேந்திரன் ஆகியோர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story