கடலூர் மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் மழை 220 ஏக்கர் வாழைகள் முறிந்து சேதம் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆய்வு


கடலூர் மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் மழை 220 ஏக்கர் வாழைகள் முறிந்து சேதம் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆய்வு
x
தினத்தந்தி 22 May 2021 11:34 PM IST (Updated: 22 May 2021 11:34 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் 2 நாட்களாக சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதில் 220 ஏக்கர் வாழைகள் முறிந்து சேதமானது. சேதமான வாழைகளை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரத்தில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வந்தது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மரங்கள், மின் கம்பங்கள் உள்ளிட்டவை காற்றின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் சாய்ந்து விழுந்தன.

மேலும் விளை நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிர்களும் பெருமளவில் சேதமடைந்துள்ளன. அதாவது அண்ணாகிராமம், கடலூர், குறிஞ்சிப்பாடி, குமராட்சி, காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட பகுதியில் சுமார் 220 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வாழைகள் சூறைக்காற்றில் முறிந்து விழுந்தன.

அமைச்சர் ஆய்வு

இதேபோல் அறுவடைக்கு தயாராக இருந்த 20 ஏக்கர் நெற்பயிர்களும் சாய்ந்து சேதமடைந்தன.
இதுகுறித்து அறிந்த அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வெள்ளக்கரை பகுதியில் சாய்ந்து விழுந்த வாழை மரங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் சேதமடைந்த வாழைகளை கணக்கீடு செய்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கும்படி வேளாண் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். 

ஆய்வின் போது, மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம், மாவட்ட வருவாய் அலுவலர் அருண் சத்யா, வேளாண்மை இணை இயக்குனர் பாலசுப்பிரமணியம், வேளாண் உதவி இயக்குனர் பூவராகன், கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், தாசில்தார் பலராமன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story