மாவட்டத்தில் கடந்த 5 மாதத்தில் 23 பேர் குண்டர் சட்டத்தில் கைது


மாவட்டத்தில் கடந்த 5 மாதத்தில் 23 பேர் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 23 May 2021 12:13 AM IST (Updated: 23 May 2021 12:13 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் கடந்த 5 மாதத்தில் 23 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு தகவல் தெரிவித்துள்ளார்.

திருச்சி, 
திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்த முகமது அப்துல்காதர் மகன் சபியுல்லா மணல் கடத்தலில் ஈடுபட்டதால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு உத்தரவிட்டுள்ளார். 

இந்தாண்டு கடந்த 5 மாதத்தில் திருச்சி மாவட்டத்தில் பல குற்றச்செயல்களில் ஈடுபட்ட 23 பேர்  குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனா். இவர்களில் 4 பேர் மணல் கடத்தலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 இதேபோல் ஊரடங்கு காலகட்டத்தில் சாராயம் காய்ச்சுபவர்கள் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுத்து கைது செய்யப்படுவார்கள் என்று திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Next Story