தூத்துக்குடியில் மது விற்ற 2 பேர் கைது


தூத்துக்குடியில் மது விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 23 May 2021 12:21 AM IST (Updated: 23 May 2021 12:21 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மேலசண்முகபுரம் பகுதியில் தனிப்படை போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு தூத்துக்குடி முத்துக்கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த சங்கு கணேசன் (வயது 36), தூத்துக்குடி மேல சண்முகபுரத்தைச் சேர்ந்த ஜெயகண்ணன் (40) ஆகியோர் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த தனிப்படை போலீசார், அவர்களிடம் இருந்த 300 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story