நீலகிரி மாவட்டத்தில் இருந்து கோவைக்கு அரசு பஸ்கள் இயக்கம்
நீலகிரி மாவட்டத்தில் இருந்து கோவைக்கு அரசு பஸ்கள் இயக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.
ஊட்டி,
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 31-ந் தேதி வரை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதையொட்டி நேற்று மற்றும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அரசு மற்றும் தனியார் பஸ்களை இயக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி-1, ஊட்டி-2, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்பட 6 போக்குவரத்து பணிமனைகளில் இருந்து மாவட்டத்துக்குள்ளும், கோவை மாவட்டத்துக்கும் அரசு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வந்த காய்கறி கடைகளின் பொருட்களை வியாபாரிகள் சரக்கு வாகனங்கள், ஆட்டோக்களில் ஏற்றி மீண்டும் நகராட்சி மார்க்கெட்டுக்கு கொண்டு சென்றனர்.
ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம், கோவை மற்றும் மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டது. இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறும்போது, ஊட்டியில் இருந்து சேலம், ஈரோடு, திருப்பூர் போன்ற தொலை தூர இடங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுவது இல்லை.
கோவை மற்றும் நீலகிரிக்குள் இயக்கப்படுகிறது. பயணிகள் வருகையை பொறுத்து அரசு பஸ்கள் இயக்கப்படும் என்றார்.
Related Tags :
Next Story