கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஆய்வு


கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஆய்வு
x
தினத்தந்தி 23 May 2021 12:34 AM IST (Updated: 23 May 2021 12:58 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்.

கூடலூர்,

கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட காமராஜ்நகர் மற்றும் பாலவாடி பகுதிகளில் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணியை பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மனோரஞ்சிதம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

தொடர்ந்து பாலவாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதனை அவர் தொடங்கி வைத்தார். பின்னர் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று பொதுமக்களிடம் நோய் தடுப்பு நடவடிக்கைகள், உடல் நலம் குறித்தும் விசாரித்தார். 

மேலும் அனைவரும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தினார். இதேபோல் பேரூராட்சி முழுவதும் சுகாதார பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார். தொடர்ந்து பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் வழங்கினார். அப்போது செயல் அலுவலர் நாகராஜன் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

Next Story