விருதுநகரில் ஒரேநாளில் 1,257 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 1,257 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 8 பேர் பலியாகினர்.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 1,257 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 8 பேர் பலியாகினர்.
1,257 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் முதன் முறையாக கொரோனா தினசரி பாதிப்பு ஆயிரத்தை கடந்து புதிய உச்சம் பெற்றுள்ளது.
நேற்று ஒரேநாளில் 1,257 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. ஆதலால் இதுவரை பாதிப்பு எண்ணிக்கை 30,431 ஆக உயர்ந்துள்ளது.
அதில் 24,469 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 5,457 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் நோய் பாதிப்புக்கு நேற்று 8 பேர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 326-ஆக உயர்ந்துள்ளது.
படுக்கைகள்
மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் 952 படுக்கைகள் உள்ள நிலையில் 859 படுக்கைகளில் நோய்பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 93 படுக்கைகள் காலியாக உள்ளன.
சிகிச்சை மையங்களில் 1,574 படுக்கைகள் உள்ள நிலையில் 719 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 805 படுக்கைகள் காலியாக உள்ளன.
பாதிப்பு
விருதுநகர் அரசு ஆஸ்பத்திரி, லட்சுமி நகர், அனுமன் நகர், செந்தி விநாயகபுரம் தெரு, காந்தி நகர், ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பு, ெரயில்வே பீடர் ரோடு, என்.ஜி.ஓ. காலனி, கணேஷ் நகர், மாடர்ன் நகர், அல்லம்பட்டி, கருப்பசாமி நகர், சூலக்கரை, அப்பநாயக்கன்பட்டி, காள பெருமாள்பட்டி, சுந்தர குடும்பன் பட்டி, நடுவப்பட்டி, ஒண்டிப்புலி, நாயக்கனூர், செங்கோட்டை, திருவிருந்தாள்புரம், சங்கரன் கிணற்று தெரு, கட்டியாபுரம், பாவாலி ரோடு, கொல்லர்தெரு, பெரிய கிணற்று தெரு, அல்லம்பட்டி, முத்துராமன் பட்டி, முத்தால்நகர், ஆர்.ஆர்.நகர், கலெக்டர் அலுவலகம், பாண்டியன் நகர், ஓ.கோவில்பட்டி, பாலன்நகர், கணேஷ் நகர், கீழ பழகியநல்லூர் ஆகிய பகுதிகளில் நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
முரண்பாடு
மேலும் காரியாபட்டி, மல்லாங்கிணறு, வத்திராயிருப்பு, கான்சாபுரம், அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர் சாத்தூர், சிவகாசி, சித்துராஜபுரம், திருத்தங்கல் உள்பட மாவட்டம் முழுவதும் பரவலாக நோய் பாதிப்பு உள்ளது.
மாவட்டத்தில் மாநில பட்டியல் படி 1,257 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட பட்டியலில் 456 பேருக்கு மட்டுமே நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மாநில மற்றும் மாவட்ட பட்டியல்களில் முரண்பாடு இருக்கும் நிலையில் மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்காத நிலையே தொடர்கிறது. இதனால் மாவட்ட மக்களுக்கு பாதிப்பு நிலை குறித்து உண்மையான கள நிலவரம் தெரிய வாய்ப்பில்லாத நிலைதான் உள்ளது.
Related Tags :
Next Story