லாரி மோதி தொழிலதிபர் பலி
மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலதிபர் லாரி மோதி பலியானார்.
விருதுநகர்,
விருதுநகர் என்.ஜி.ஓ. காலனி காந்தி நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 60). தொழிலதிபர். இவர் தன் மகன் பிரபாகரன் (36) என்பவருடன் மதுரை ரோட்டில் அவர்களது தொழில் நிறுவனத்திற்கு தனித்தனி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரி முருகன் சென்ற மோட்டார் சைக்கிளில் மோதியதில் அவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இது பற்றி பிரபாகரன் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுனர் இனாம் ரெட்டியபட்டியை சேர்ந்த கணேசமூர்த்தி (24) என்பவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story