வள்ளியூரில் ரெயில்வே சுரங்கப்பாதை தற்காலிகமாக திறப்பு; சபாநாயகர் மு.அப்பாவு பார்வையிட்டார்


வள்ளியூரில் ரெயில்வே சுரங்கப்பாதை தற்காலிகமாக திறப்பு; சபாநாயகர் மு.அப்பாவு பார்வையிட்டார்
x
தினத்தந்தி 23 May 2021 1:23 AM IST (Updated: 23 May 2021 1:23 AM IST)
t-max-icont-min-icon

வள்ளியூரில் ரெயில்வே சுரங்கப்பாதை தற்காலிகமாக திறக்கப்பட்டது. இதனை சபாநாயகர் மு.அப்பாவு பார்வையிட்டார்.

வள்ளியூர், மே:
வள்ளியூரில் ரெயில்வே சுரங்கப்பாதை தற்காலிகமாக திறக்கப்பட்டது. இதனை சபாநாயகர் மு.அப்பாவு பார்வையிட்டார்.

ரெயில்வே சுரங்கப்பாதை

வள்ளியூர்- திருச்செந்தூர் மெயின் ரோட்டில் ரெயில்வே கேட்டின் குறுக்கே ரூ.15 கோடியே 17 லட்சம் செலவில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இதனால் அந்த வழியாக செல்லும் கனரக வாகனங்கள் சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் மாற்றுப்பாதையில் சுற்றி செல்கின்றன. இந்த நிலையில் வள்ளியூரில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளை சபாநாயகர் மு.அப்பாவு கடந்த சில நாட்களுக்கு முன்பு பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், பணிகளை விரைந்து நிறைவேற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தற்காலிகமாக திறப்பு

தொடர்ந்து ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் துரிதமாக நிறைவேற்றப்பட்டது. நேற்று சுரங்கப்பாதை வழியாக தற்காலிகமாக வாகனங்கள் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டது. இதனை சபாநாயகர் மு.அப்பாவு பார்வையிட்டார்.
நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் லிங்குசாமி, வள்ளியூர் நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் கிறிஸ்டோபர் தாஸ், சுகாதார ஆய்வாளர் ஆறுமுகம், தி.மு.க. வள்ளியூர் தெற்கு ஒன்றிய செயலாளர் விஜயன், ராதாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story