களக்காடு வடக்கு பச்சையாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும்- கலெக்டரிடம், ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கோரிக்கை


களக்காடு வடக்கு பச்சையாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும்- கலெக்டரிடம், ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கோரிக்கை
x
தினத்தந்தி 23 May 2021 1:46 AM IST (Updated: 23 May 2021 1:46 AM IST)
t-max-icont-min-icon

களக்காடு வடக்கு பச்சையாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம், ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்தார்.

இட்டமொழி, மே:
நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணுவை, ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நாங்குநேரி தொகுதியில் உள்ள களக்காடு வடக்கு பச்சையாறு அணையில் இருந்து கார் சாகுபடி, நெற்பயிர் பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று களக்காடு பகுதி விவசாயிகள் என்னிடம் கோரிக்கை வைத்துள்ளனர். தற்போது அணையின் நீர்மட்டம் 42.49 அடியாக உள்ளது. எனவே விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, உடனடியாக வடக்கு பச்சையாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

அப்போது, நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் உடன் சென்றார். மேலும் நேற்று நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட, மருதகுளம் பகுதியில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார். முகாமில் சென்னை கால்நடைத்துறை முதன்மை நோய் நிகழ்வியல் அலுவலர் டாக்டர் சத்தியநாராயணன் முன்னிலையில், அம்பை கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் டாக்டர் ஆபிரகாம்ஜாப்ரி ஞானராஜ், கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் ஜான் சுபாஷ், கால்நடை டாக்டர் மாரியப்பன் ஆகியோர் செம்மறி ஆடுகளுக்கு தடுப்பூசி போட்டனர்.

Next Story