கடையம் பகுதி ஆரம்ப சுகாதார நிலையங்களில் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு
கடையம் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
கடையம், மே:
கடையம் அருகே உள்ள பாப்பான்குளம், கோவிலூற்று, இடைகால் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார். அப்போது நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்கள் பழனிகுமார், முகமது உமர், கோமதி சங்கர் ஆகியோரிடம் கேட்டறிந்தார். மேலும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு படுக்கை வசதி உள்ளிட்ட தேவையான கூடுதல் வசதிகளை தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் விரைவாக செய்துதர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். பாப்பான்குளத்திற்கு நோயாளிகள் பயன்பெறும் வகையில் ஸ்கேன் மிஷின் வழங்க வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்த ஆய்வின்போது கடையம் ஒன்றிய செயலாளர்கள் எஸ்.வி.முருகேசன், அருவேல்ராஜ், நகர செயலாளர் சங்கர், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் புளிகணேசன், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து முக்கூடல் அண்ணாநகர் பகுதிக்கு மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. நேற்று வந்தார். அவரை முக்கூடல் நகர செயலாளர் வில்சன் வரவேற்றார். தொடர்ந்து பொதுமக்களுக்கு மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. கபசுர குடிநீர் வழங்கினார்.
Related Tags :
Next Story