சுரண்டை அருகே வாகன சோதனையில் ஆடு திருடும் கும்பல் கைது


சுரண்டை அருகே வாகன சோதனையில் ஆடு திருடும் கும்பல் கைது
x
தினத்தந்தி 23 May 2021 2:09 AM IST (Updated: 23 May 2021 2:09 AM IST)
t-max-icont-min-icon

சுரண்டை அருகே வாகன சோதனையில் ஆடு திருடும் கும்பலை போலீசார் கைது செய்தனர்.

சுரண்டை, மே:
சுரண்டை ஆனைகுளம் விலக்கு பகுதியில் சுரண்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வேகமாக வந்த மோட்டார்சைக்கிளை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், தென்காசி அருகில் உள்ள கம்பளி கிராமம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கனகராஜ் மகன் சந்திரன் (வயது 24), சேர்ந்தமரம் அருகில் உள்ள கரைகண்டார்குளத்தை சேர்ந்த மார்க்கண்டேயன் மகன் மணிக்குமார் (19) என்பதும் தெரியவந்தது. மேலும் இருவரையும் விசாரித்தபோது சுரண்டை மற்றும் வீரகேரளம்புதூர் பகுதிகளில் ஆடுகளை திருடியதை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார்சைக்கிள் மற்றும் ஆடு விற்ற பணம் ரூ. 60 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

Next Story