சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 5 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் உறுதி-டாக்டர்கள் தீவிர சிகிச்சை


சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 5 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் உறுதி-டாக்டர்கள் தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 23 May 2021 2:46 AM IST (Updated: 23 May 2021 2:47 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 5 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

சேலம்:
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 5 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கருப்பு பூஞ்சை
சேலம் மாவட்டத்தில் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கொரோனா வைரசை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு கருப்பு பூஞ்சை என்ற நோய் ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் மேலும் பீதி அடைந்து வருகின்றனர். சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மட்டும் கருப்பு பூஞ்சை நோய் அறிகுறியுடன் 13 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
5 பேருக்கு உறுதி
இந்த நிலையில் 13 பேரில் 5 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 
இது குறித்து ஆஸ்பத்திரி டீன் வள்ளி சத்தியமூர்த்தி கூறும்போது, சேலம் மாவட்டத்தை சேர்ந்த கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பேர், கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்த தர்மபுரியை சேர்ந்த ஒருவர் என 5 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் சர்க்கரை நோய் பாதிப்புள்ளது. 
பாதிக்கப்பட்டவர்களுக்கு நரம்பியல் துறை, கண் மருத்துவத்துறை, காது, மூக்கு, தொண்டை நிபுணர்கள், பொதுநலம் உள்ளிட்ட டாக்டர்கள் அடங்கிய தனி மருத்துவக்குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நோய் அதிகரிக்கும் போது தேவைக்கேற்ப படுக்கை வசதிகள் அதிகரிக்கப்படும் என்றார்.

Next Story