கடை உரிமையாளர் தற்கொலை


கடை உரிமையாளர் தற்கொலை
x
தினத்தந்தி 23 May 2021 4:52 AM IST (Updated: 23 May 2021 4:52 AM IST)
t-max-icont-min-icon

கடை உரிமையாளர் தற்கொலை

மதுரை
மதுரை புதூர் கொடிக்குளம் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 43), இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்திருந்தார். இவர் கடையை விரிவாக்கம் செய்ய பலரிடம் கடன் வாங்கியிருந்தார். தற்போது கொரோனா காலக்கட்டமாக இருப்பதால் கடையை பூட்டி விட்டார். எனவே கடன் வாங்கியவர்களிடம் பணத்தை கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆதலால் கடன் கொடுத்தவர்கள் அவரிடம் பணத்தை கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். அதனை நினைத்து மனம் வருந்தம் அடைந்த பாலாஜி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Next Story