டேங்கர் லாரிகள் சிறப்பு ரெயிலில் ஒடிசாவுக்கு அனுப்பி வைப்பு
ஆக்சிஜனை ஏற்றி வந்த டேங்கர் லாரிகள் சிறப்பு ரெயிலில் ஒடிசாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
வாடிப்பட்டி,
ஒடிசாவிலிருந்து தமிழகத்திற்கு நேற்று முன்தினம் 79.30 டன் ஆக்சிஜனை ஏற்றி வந்த லாரிகள் நேற்று சிறப்பு ெரயிலில் வாடிப்பட்டி ரெயில் நிலையத்திலிருந்து மீண்டும் திரும்பி சென்றன. கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதால் தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டு தொடர்ந்து உயிரிழந்து வந்தனர்.
அதனால் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தட்டுப்பாடு இல்லாமல் கூடுதலாக ஆக்சிஜன் இருப்பு வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.
இதைதொடர்ந்து தமிழகத்திற்கு தேவையான ஆக்சிஜனை தரை வழியாக லாரியில் வந்தால் காலதாமதம் ஏற்படும் என்பதற்காக போர்கால அடிப்படையில் விரைவாக வந்து சேரும் விதமாக ஒடிசா மாநிலத்திலிருந்து 79.30 டன் ஆக்சிஜன் லாரிகளை ஏற்றிக்கொண்டு சிறப்பு ரெயில் நேற்று முன்தினம் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ெரயில் நிலையத்திற்கு வந்தது. அந்த ெரயிலில் இருந்து லாரிகளை கீழே இறக்கி தரை வழியாக நேற்று முன்தினமே ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, திருச்சி, சிவகங்கை, கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பின் நேற்று அந்த லாரிகள் நேற்று மாலை அதே சிறப்பு ரயிலில் ஒடிசாவிற்கு திருப்பி சென்றன.
Related Tags :
Next Story