மேலூரில் 9 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசம்
மேலூரில் 9 மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்தன. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்
மேலூர்,
மேலூரில் உள்ள சிவகங்கை சாலையில் இருசக்கர வாகன பழுதுநீக்க கடை வைத்திருப்பவர் புல்லட்மணி என்ற மணிகண்டன் (வயது 38). தற்போது ஊரடங்கு என்பதால் கடையின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் நேற்று அதிகாலை 3 மணியளவில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.
இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். மேலூர் தீயணைப்புதுறையினரும் வரவழைக்கப்பட்டு வாகனங்கள் மீது பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இருந்தபோதிலும் 9 இருசக்கர வாகனங்கள் தீ விபத்தில் எரிந்து சேதமானது.
இந்த சம்பவம் குறித்து மணி மேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் யாரேனும் தீ வைத்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்களா? என போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story