கோவில்பட்டியில் காய்கறி விலை 3 மடங்கு உயர்வு


கோவில்பட்டியில் காய்கறி விலை 3 மடங்கு உயர்வு
x
தினத்தந்தி 23 May 2021 6:20 PM IST (Updated: 23 May 2021 6:20 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி மார்க்கெட்டில் காய்கறி விலை 3 மடங்கு விலை உயர்த்தி விற்கப்பட்டன

கோவில்பட்டி:
கோவில்பட்டி தற்காலிக மார்க்கெட்டுகளில் நேற்று காய்கறிகள் விலை 3 மடங்கு விலை உயர்த்தி விற்கப்பட்டது. பொதுமக்கள் வேறு வழியின்றி கூடுதல் விலை கொடுத்து காய்கறிகளை வாங்கி சென்றனர்.
தளர்வு இல்லா ஊரடங்கு
தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் தளர்வு இல்லா ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதில், பால், ஆங்கிலம் மற்றும் தமிழ் மருந்து கடைகளுக்கு மட்டும் விதிவிலக்கு வழங்கப்பட்டு உள்ளது.
இதை தொடர்ந்து ஊரடங்கு காலத்திற்கு தேைவயான அத்தியாவசிய பொருடங்களை வாங்கிக்கொள்ள  நேற்று முன்தினமும், நேற்றும் அனைத்து கடைகளும் திறக்கலாம் எனவும் அறிவிக்கப் பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து கோவில் பட்டியில் நேற்று முன்தினம் மாலை 4 மணி முதல் அனைத்து கடைகளும் திறக்கப் பட்டன. ஆனால், 6 மணிக்கு மேல் சாரல் மழை பெய்த தால் மக்கள் கூட்டம் அதிகமாக இல்லை. 
நேற்று காலை முதல் பைபாஸ் ரோட்டில் உள்ள கூடுதல் பஸ் நிலைய வளாகம், எட்டயபுரம் ரோடு வ.உ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகம் ஆகிய வற்றில் இயங்கிய தற்காலிக  காய்கறி மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம் கூட்ட மாக வந்து குவிந்தனர்.  
இதனால், பைபாஸ் ரோடு அருகே உள்ள அணுகு சாலை, எட்டயபுரம் ரோடு ஓரங்களில் மோட்டார் சைக்கிள் கள் வரிசை வரிசையாக அணி வகுத்து நின்றன. 
காற்றில் பறந்த சமூக இடைவெளி
காய்கறி சந்தை இயங்கும் வளாகங் களில் சமூக இடைவெளி இல்லாமல் மக்கள் காய்கறிகளை வாங்கு வதில் ஆர்வம் காட்டினர். ஜவுளி கடைகள், பாத்திரக் கடைகள், பேன்ஸி கடைகள், பெயின்ட் கடைகள், மளிகை கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. 
இதனால், பிரதான சாலை, மாதாங் கோவில் சாலை, தெற்கு பஜார், தேரடி தெரு, கிருஷ்ணன் கோவில் தெரு, காய்கறி சந்தை சாலை, இளையரச னேந்தல் சாலை என மக்கள் மோட்டார் சைக்கிள் களில் சென்ற வண்ணம் இருந்தனர்.
3 மடங்கு உயர்வு
காய்கறிகளின் விலையும் 3 மடங்காக உயர்த்தி விற்பனை செய்யபபட்டது. 
கடந்த 2 நாட்களுக்கு முன்பு கிலோவுக்கு ரூ.35-க்கு விற்பனை செய்யப் பட்ட கத்தரிக் காய் ரூ.150-க்கு விற்கப்பட்டது. கிலோ ரூ.10-க்கு விற்பனையான தக்காளி ரூ.80 முதல் ரூ.100-க்கும், ரூ.65 க்கு விற்பனையான அவரைக் காய் ரூ.250 முதல் ரூ.300 வரையும், ரூ.60-க்கும் விற்கப்பட்ட பீன்ஸ் ரூ.200 வரையும், ரூ.25-ல் இருந்த கேரட் ரூ.120, ரூ.40-க்கு விற்பனையான இஞ்சி ரூ.100, ரூ.40-ல் இருந்த கொத்த மல்லி ரூ.160, ரூ.60-ல் இருந்த சின்ன வெங்காயம் ரூ.90, ரூ.30-ல் இருந்த பல்லாரி ரூ.60 என காய் கறிகள் விற்பனை செய்யப் பட்டன. வேறு வழியின்றி பொதுமக்களும் கூடுதல் விலை கொடுத்து காய்கறிகளை வாங்கி சென்றனர். 
நேற்று மாலை மார்்கெட் பகுதியில் கூட்டம் அலைமோதியது.

Next Story