உடன் வேலை செய்பவரின் மனைவியை கற்பழித்த கடற்படை ஊழியர் கைது
திருமணமான கடற்படை ஊழியர் பயிற்சிக்காக கேரளாவுக்கு சென்று உள்ளார். அவரது மனைவியுடன், சம்பந்தப்பட்ட ஊழியர் மட்டும் இருந்தனர்.
மும்பை,
மும்பை கொலபா பகுதியில் கடற்படை ஊழியர், மனைவியுடன் வசித்து வருகிறாா். இவர்களுடன் திருமணமாகாத 30 வயது கடற்படை ஊழியரும் தங்கி இருந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று திருமணமான கடற்படை ஊழியர் பயிற்சிக்காக கேரளாவுக்கு சென்று உள்ளார். அவரது மனைவியுடன், சம்பந்தப்பட்ட ஊழியர் மட்டும் இருந்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று மதுபோதையில் இருந்த அவர், உடன் வேலைபார்க்கும் கடற்படை ஊழியரின் மனைவியை கற்பழித்தார். மேலும் கணவரிடம் நடந்த சம்பவத்தை கூறினால் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துவிடுவேன் எனவும் பெண்ணை மிரட்டி உள்ளார்.
இந்தநிலையில் பயந்து போன அந்த பெண் கையை அறுத்து தற் கொலைக்கு முயன்றார். இதுகுறித்து கணவர் விாரித்தபோது நடந்த சம்பவத்தை அவரிடம் கூறி கதறி அழுதுள்ளார்.
இதுகுறித்து கப்பரடே போலீசில் புகார் அளிக்கப்பட்டது. வழக்குப்பதிவு செய்த போலீசார், உடன் தங்கி இருந்த ஊழியரின் மனைவியை கற்பழித்த 30 வயது கடற்படை ஊழியரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story