மைசூரு சாமராஜா தொகுதிக்கு அடிக்கடி வருவது ஏன்? சித்தராமையாவுக்கு பா.ஜனதா கேள்வி


மைசூரு சாமராஜா தொகுதிக்கு அடிக்கடி வருவது ஏன்? சித்தராமையாவுக்கு பா.ஜனதா கேள்வி
x
தினத்தந்தி 23 May 2021 9:20 PM IST (Updated: 23 May 2021 9:20 PM IST)
t-max-icont-min-icon

மைசூரு சாமராஜா தொகுதிக்கு அடிக்கடி வருவது ஏன் என்று சித்தராமையாவுக்கு பா.ஜனதா கேள்வி எழுப்பியுள்ளது.

பெங்களூரு, 

கர்நாடக பா.ஜனதா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

கொரோனா பரவலின் இந்த நெருக்கடி நேரத்தில் சித்தராமையா மீண்டும் ஒரு முறை தொகுதி மாறுவார் என தெரிகிறது. சொந்த தொகுதியான சாமுண்டீஸ்வரி தொகுதியில் தோல்வி அடைந்து, பாதாமியில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் சித்தராமையா வெற்றி பெற்றார்.

இப்போது மைசூரு சாமராஜா தொகுதியில் அவர் அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். இதன் நோக்கம் என்ன? என்பதை சித்தராமையா கூற வேண்டும். கொரோனா பரவலுக்கு பிறகு அவர் பாதாமி தொகுதிக்கு எத்தனை முறை சென்றுள்ளார். எவ்வளவு பேருக்கு தடுப்பூசி போட்டுள்ளார் என்பதை அவர் கூற வேண்டும். ஆனால் இதை கேட்டால் அவருக்கு கோபம் வருகிறது.

சாமராஜா தொகுதிக்கு அடிக்கடி வருவது குறித்து சித்தராமையா விளக்கம் அளிக்க வேண்டும். சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது திப்பு சுல்தான் ஜெயந்தியை அரசு விழாவாக கொண்டாடியது, ஷாதி பாக்கிய (இஸ்லாமிய பெண்களுக்கு திருமண உதவி) திட்டத்தை அமல்படுத்தியது ஏன் என்பதற்கு இப்போது பதில் கிடைத்துள்ளது.

சாமராஜா போன்ற தொகுதியை நேரம் வரும்போது தன்வசப்படுத்தி கொள்ளலாம் என்பது தான் சித்தராமையாவின் நோக்கம். இவ்வாறு பா.ஜனதா தெரிவித்துள்ளது.

Next Story