நேற்று ஒரு நாள் முழு ஊரடங்கு தளர்த்தப்பட்டு பஸ்கள் ஓடும், கடைகளை திறக்க அனுமதி வழங்கப்படுகிறது என்று அரசு அறிவித்திருந்ததை தொடர்ந்து உடுமலையில் நேற்று பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நேற்று ஒரு நாள் முழு ஊரடங்கு தளர்த்தப்பட்டு பஸ்கள் ஓடும், கடைகளை திறக்க அனுமதி வழங்கப்படுகிறது என்று அரசு அறிவித்திருந்ததை தொடர்ந்து உடுமலையில் நேற்று பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
உடுமலை
நேற்று ஒரு நாள் முழு ஊரடங்கு தளர்த்தப்பட்டு பஸ்கள் ஓடும், கடைகளை திறக்க அனுமதி வழங்கப்படுகிறது என்று அரசு அறிவித்திருந்ததை தொடர்ந்து உடுமலையில் நேற்று பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை வேகமாக பரவத்தொடங்கியதைத்தொடர்ந்து, அதைத்தடுப்பதற்கான பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அதன்படி பொதுமக்கள் அரசின் வழிகாட்டுதல் நெறி முறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
அதன்படி பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளில்லாமல் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என்றும், அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக முக கவசம் அணியவேண்டும் என்றும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி வருகிறது.
இன்று முதல் முழு ஊரடங்கு
ஆனால் பொதுமக்கள் பலர் சமூக இடைவெளியை கடைபிடிப்பதில்லை. பல கடைகளில் பொருட்களை வாங்குவதற்கு சமூக இடைவெளி இல்லாமல் நின்று வாங்குகின்றனர். அதனால் கொரோனா தொற்று அதிகரிக்கக்கூடும் என்று கருதிய அரசு, கொரோனா பரவுவதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (திங்கட்கிழமை) முதல் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் மருந்து கடை, பால் கடையைத்தவிரமளிகைக்கடை, காய்கறி கடைகள் உள்ளிட்ட மற்ற அனைத்து கடைகளும் திறப்பதற்கு அனுமதியில்லை என்றும் அறிவித்துள்ளது.
அதேசமயம் பொதுமக்கள் தங்களுக்குத்தேவையான மளிகைப்பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்கிக்கொள்வதற்கு வசதியாக நேற்று முன்தினம் பிற்பகல் முதல் நேற்று இரவு வரை கடைகளை திறந்துவைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுவதாகவும், நேற்று இரவு வரை பஸ்கள் ஓடும் என்றும் அறிவித்திருந்தது.
பஸ்கள் ஓடின
இந்த அறிவிப்பைத்தொடர்ந்து அரசு பஸ்கள் ஓடின. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் உடுமலை கிளையில் வெளியூர் செல்லும் பஸ்கள் 36-ம், டவுன் பஸ்கள் 58-ம் என மொத்தம் 94 பஸ்கள் உள்ளன. இதில் நேற்று வெளியூர் செல்லும்பஸ்கள் மதியம் வரை 29 பஸ்களும், அதன்பிறகு மற்ற பஸ்களும் ஓடின. அத்துடன் கோவை, பொள்ளாச்சி, பழனி ஆகிய இடங்களில் இருந்தும் உடுமலை வழியாக அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. இதில் திருப்பூர் மற்றும் பொள்ளாச்சி ஆகிய இடங்களுக்கு செல்லும் பஸ்களில் கூட்டம் குறைவாக இருந்தது. பழனிக்கு செல்லும் பஸ்களில் கூட்டம் அதிகம் இருந்தது. பழனி செல்லும் பஸ்களில்பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் சில பஸ்களில் பலபயணிகள், உட்காருவதற்கு இருக்கைகள் கிடைக்காமல் நின்று கொண்டும், படிக்கட்டில் தொங்கி கொண்டும் சென்றனர்.
உடுமலை சுற்று வட்டார கிராமங்களில் இருந்து உடுமலைக்கு வந்து செல்லும் பயணிகள் குறைவாக இருந்ததாலும், பல வழித்தடங்களில் செல்வதற்கு பயணிகளே இல்லாத நிலையிலும் 10டவுன்பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன.
தனியார் பஸ்கள்
உடுமலையில் வெளியூர் செல்லும் தனியார் பஸ்கள் 5-ம், டவுன் பஸ்கள்19-ம் எனமொத்தம் 24 தனியார் பஸ்கள் உள்ளன. இந்த தனியார் பஸ்கள் ஓடவில்லை. லாரி, சரக்கு வாகனம், ஆட்டோ ஆகியவை ஓடின. அதனால் நகரில் வாகன போக்குவரத்து அதிகமாக இருந்தது.
உடுமலை ராஜேந்திரா சாலையில் நகராட்சி வாரச்சந்தை வளாகத்தில் உள்ள தினசரி சந்தை மற்றும் காய்கறி கமிஷன் மண்டிகள் நேற்று செயல்பட்டன. இந்த சாலையில் மளிகைக்கடைகள், பழக்கடைகள், காய்கறிகடைகள் உள்ளிட்ட கடைகள் அதிகம் உள்ளன. அதனால் இந்த சாலையில் பெரும்பாலான நேரங்களில் போக்குவரத்து அதிகமாக இருக்கும். நேற்று ஊரடங்கின் தளர்வு காரணமாக பொதுமக்கள் நடந்து செல்வதும், வாகனங்களில் செல்வதும் என இந்த சாலையில ்போக்குவரத்து அதிகமாக இருந்தது. இந்த நிலையில் காய்கறி கமிஷன் மண்டிகளுக்கு சரக்கு வாகனங்கள் ஒரே நுழைவு வாயில் வழியாக வரிசையாக சென்று வந்து கொண்டிருந்த நிலையில் இந்த சாலையில் மற்ற வாகனங்களும் சென்று கொண்டிருந்ததால் அந்த நுழைவு வாயில் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் சிரமப்பட்டு போக்குவரத்தை ஒழுங்கு படுத்தினர்.
கடைகள் திறப்பு
உடுமலையில் நேற்று மளிகைக்கடைகள், நகைக்கடைகள், ஜவுளிகடைகள், பேக்கரிகள், டெய்லர்கடைகள், வீட்டு உபயோகப்பொருட்கள் விற்பனை கடைகள், பர்னிச்சர்கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் திறந்திருந்தன. அதனால் நகரில் பொருட்களை வாங்குவதற்குபொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
மத்திய பஸ்நிலையம் பகுதி, பொள்ளாச்சி சாலை, பழனிசாலை, ராஜேந்திரா சாலை, சத்திரம் வீதி, கல்பனா சாலை, தளிசாலை உள்ளிட்ட பல சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகமாக இருந்தது. அதனால்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மளிகைக்கடைகளில் கூட்டம்
மளிகைக்கடைகளில் பொருட்களை வாங்குவதற்கு பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்றிருந்தனர். மளிகைப்பொருட்களை வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலைமோதியது.பணம் வைத்துள்ளவர்கள் அதிக அளவு பொருட்களை வாங்கி கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் கொண்டு சென்றனர்.பணம் குறைவாக வைத்திருந்தவர்கள் அதற்கு ஏற்ப எந்த பொருள் மிகவும் அவசியம் தேவை என்று யோசித்து அதற்கு ஏற்ப பொருட்களை குறைந்த அளவில் வாங்கி சென்றனர்.
சில மளிகைக்கடைகளில் காலையில் இருந்து தொடர்ந்து மளிகைப்பொருட்களை எடைபோட்டு விநியோகிக்கும் பணிகளை செய்ததால் கடை பணியாளர்கள் சோர்வடைந்தனர். உடுமலையில்பிற்பகலில் வாகன போக்குவரத்து சிறிது குறைந்தது.உடுமலையில் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.அத்துடன் ரோந்து பணியிலும் ஈடுபட்டிருந்தனர்.
இறைச்சிகடைகள்
உடுமலையில் உள்ள ஆட்டிறைச்சி கடைகள், கோழி கடைகள் மற்றும் மீன்கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கடைகளில் இறைச்சி வாங்குவதற்கு பொதுமக்கள் முண்டியடித்துக்கொண்டு வருவதை தடுக்கும் வகையில், கடைகளுக்கு முன்பு கயிறு கட்டி தடுப்பு அமைக்கப்பட்டிருந்தது. அதனால் பொதுமக்கள் அந்த கயிற்றுக்கு வெளிப்புறம் இருந்தபடி இறைச்சிகளை வாங்கி சென்றனர்.
Related Tags :
Next Story