உடுமலையை அடுத்த திருமூர்த்தியில் குரங்குகள் உணவு கிடைக்காமல் தவித்து வருகின்றன.


உடுமலையை அடுத்த திருமூர்த்தியில் குரங்குகள் உணவு கிடைக்காமல் தவித்து வருகின்றன.
x
தினத்தந்தி 23 May 2021 10:05 PM IST (Updated: 23 May 2021 10:05 PM IST)
t-max-icont-min-icon

உடுமலையை அடுத்த திருமூர்த்தியில் குரங்குகள் உணவு கிடைக்காமல் தவித்து வருகின்றன.

தளி, 
உடுமலையை அடுத்த திருமூர்த்தியில் குரங்குகள் உணவு கிடைக்காமல் தவித்து வருகின்றன.
திருமூர்த்திமலை 
உடுமலையை அடுத்த மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்திமலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் பிரம்மா, சிவன் விஷ்ணு ஆகிய கடவுள்கள் ஒருசேர ஒரே குன்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். அடிவாரத்தில் இருந்து 750 மீட்டர் உயரத்தில் பஞ்சலிங்க அருவி உள்ளது.
அது தவிர கோவிலுக்கு வரும் வழியில் படகுஇல்லம், சிறுவர்பூங்கா, நீச்சல் குளம், படகுஇல்லம், திருமூர்த்திஅணை உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. அவற்றை பார்வையிடவும் அருவியில் குளித்து மகிழவும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள், பக்தர்கள் திருமூர்த்திமலைக்கு வந்து செல்கின்றனர். இதனால் உடுமலை பகுதியின் சிறந்த சுற்றுலா மற்றும் ஆன்மிக தலமாக திருமூர்த்திமலை விளங்கி வருகிறது.
அருவியில் குளிப்பதற்கு தடை 
கோவில் உடுமலை வனப்பகுதியின் அடிவாரத்தில் உள்ளதால் அங்கு ஏராளமான குரங்குகள் வசித்து வருகின்றன. அவை மரத்துக்கு மரம் தாவுவது, தண்ணீரில் குதித்து நீச்சல் அடிப்பது, அங்கும் இங்கும் ஓடி சுற்றுலாப்பயணிகளை மகிழ்வித்து வந்தது. இதனால் அவர்களும் மனம் மகிழ்ந்து கொண்டு வந்த உணவுகளை குரங்குகளுக்கு அளித்து வந்தனர். இதனால் அவை படிப்படியாக காட்டு வாழ்க்கையை மறந்து அடிவாரப்பகுதியிலேயே நிரந்தரமாக வசித்து வருகிறது. பசியோடு இருக்கும் தருணத்தில் சுற்றுலாப்பயணிகளை மிரட்டி அவர்கள் கொண்டு வருகின்ற  உணவுகளை பறித்துச்சென்று குரங்குகள் சாப்பிடுவதும் வழக்கமாக ஒன்றாகும். இந்த சூழலில் கொரோனா பரவல் தமிழகத்தில் உச்சத்தை எட்டியது. இதனால் பஞ்சலிங்க அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.
உணவின்றி தவிக்கும் குரங்குகள்
 கோவிலில் 3 கால பூஜைகள் மட்டுமே நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக கோவில் பகுதியில் பக்தர்கள் நடமாட்டம்இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. உலகத்தையே புரட்டிப் போட்ட கொரோனா குரங்குகளின் வாழ்க்கையையும் விட்டுவைக்கவில்லை. 
இதனால் அடிவாரப்பகுதியில் வசித்து வந்த குரங்குகள் உணவு கிடைக்காமல் தவித்து வருகின்றன. யாராவது வருவார்களா உணவு தருவார்களா என்று வழிமேல் விழி வைத்துக் காத்துக் கொண்டுள்ளது. எனவே குரங்குகளுக்கு தன்னார்வலர்கள் மூலமாக உணவு வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் அல்லது குரங்களை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story