மாவட்டம் முழுவதும் சிறப்பு தடுப்பூசி முகாம்
கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்டம் முழுவதும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.
முதுகுளத்தூர், மே.24-
கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்டம் முழுவதும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.
ஆய்வு
முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப் படும் சிகிச்சை, படுக்கை வசதி மற்றும் அடிப்படை வசதிகளை போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆய்வு செய்தார்.
அப்போது அவர், அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும். அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து கொரோனாவை ஒழிக்க பாடுபட வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்.
தடுப்பூசி முகாம்
மேலும் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். மாவட்டத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை. போதிய மாத்திரை, மருந்து இருப்பில் உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தபட உள்ளது என கூறினார்.
ஆய்வின்போது ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் கலெக்டர் பிரதீப் குமார், நவாஸ்கனி எம்.பி., செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி ஜெகவீரபாண்டியன், கைலைசெல்வன், முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேல், முன்னாள் மாவட்ட செயலாளர் திவாகரன், முதுகுளத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ராகவேந்திரர் ரவி, ஆணையாளர் மங்களேஸ்வரி, ஒன்றிய செயலாளர்கள் பூபதி மணி, சண்முகம், நகர் செயலாளர் ஷாஜஹான் ஆகியோர் உடன் இந்தனர்.
எம்.எல்.ஏ. அலுவலகம்
முன்னதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் முதுகுளத்தூர் சட்டமன்ற அலுவலகத்தை திறந்து வைத்தார். அப்போது அவருக்கு தி.மு.க. கட்சியினர் பூரண கும்ப மரியாதை அளித்தனர். இதில் பரமக்குடி தொழில் அதிபர் ராமு யாதவ், சாத்தகோன் வலசை ஊராட்சி தலைவர் வீரபத்திரன், விளத்தூர் பாஸ்கரன், புளியங்குடி முன்னாள் ஊராட்சி தலைவர் அழகர்சாமி, சூரங்குளம் சண்முகசுந்தரம், விளக்கனேந்தல் ஊராட்சி தலைவர் சண்முகவள்ளி சண்முகம், தி.மு.க. கிளை செயலாளர் குமரவேல், ஊராட்சி மன்ற தலைவர்கள் வளநாடு பாண்டி, பூசேரி வளர்மதி சாந்தகுமார், மைக்கேல் பட்டணம் குழந்தை தெரேஸ் சிங்கராயர், செல்லூர் மகேசுவரி ஜீவன் செல்வராஜ், தேரிருவேலி அபுபக்கர் சித்திக், செல்வநாயகபுரம் பால்சாமி, குமாரகுறிச்சி செந்தில், சாம்பகுளம் கல்யாணி பால்ராஜ், பிரபுக்களுர் தீபா நீதிராஜன், அரபோது ஊராட்சி துணைத் தலைவர் குமரகுரு, சாம்பகுளம் கிராம இளைஞர் அணி தலைவர் சரத்குமார், ஒன்றிய கவுன்சிலர் நாகஜோதி ராமர், சிறுகுடி தி.மு.க. இளைஞரணி சுரேஷ் கண்ணன், எஸ். வாகைகுளம் ஊராட்சி தலைவர் ஜெயலட்சுமி வடமலை, விவசாய அணி செல்லமணி, பாசில் அமின், முகமது இப்ராகிம், இளைஞரணி சக்தி மோகன், தூவல் மூர்த்தி, தேரிருவேலி விஜயகுமார், பெரிய இலை கருப்பையா வாகைகுளம் அர்ஜுனன் உள்பட அரசு அதிகாரிகள், தி.மு.க. பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story