காய்கறிகள் தட்டுப்பாடின்றி கிடைக்க சிறப்பு ஏற்பாடு
காய்கறிகள் தட்டுப்பாடின்றி கிடைக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
ராமநாதபுரம்,
தளர்வு இல்லாத முழு ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் தங்கு தடையின்றி வினியோகம் செய்ய தேவையான முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர் பான ஆலோசனை கூட்டம் கூடுதல் மாவட்ட கலெக்டர் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பிரதீப்குமார் தலைமையில் நடை பெற்றது. கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் பிரதீப்குமார் கூறியதாவது:- தமிழக முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று முதல் வருகிற 31-ந்தேதி வரை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு நடைமுறைப் படுத்தப்பட உள்ளது. இக்காலகட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம பகுதிகளுக்கும் ஒவ்வொரு குக்கிராமம் வாரியாக பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள் வினியோகிப்பதை உறுதி செய்ய வேண்டும். காய்கறி வினியோக வாகனங்களுக்கு அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அனுமதி சீட்டுகள் வழங்குவார். வியாபாரிகள், உழவர் உற்பத்தி குழு, உழவர் ஆர்வலர் குழுக்கள் தங்களது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர்களை அணுகி அனுமதி சீட்டு பெற்றுக்கொள்ளலாம்.
ஊராட்சி ஒன்றியம் வாரியாக தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் தொடர்பு எண்கள் விவரமாவது:- மண்டபம் மற்றும் ராமநாதபுரம் வட்டாரத்திற்கு 72994 62970, போகலூர் மற்றும் நயினார்கோவில் 86676 02994, ஆர்.எஸ்.மங்கலம் 96595 84931, திருவாடானை 97513 81492, கமுதி 94891 66421, முதுகுளத்தூர் மற்றும் பரமக்குடி 94885 40830 கடலாடி 75980 27841 திருப்புல்லாணி 82202 88448 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். வாகனங்களில் விற்பனை செய்பவர்கள் அதிகபட்ச காய்கறி வகைகளை வண்டியில் வைத்து கொடுக்கும்படியும், கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்றிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் காய்கறிகளை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தாலோ அல்லது தங்கள் பகுதிக்கு வரவில்லை என்றாலும் பொதுமக்கள் தங்களது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர்களை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு கூறினார்.இந்த கூட்டத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக், ராமநாதபுரம் சப்-கலெக்டர் சுகபுத்ரா, தோட்டக்கலை துணை இயக்குனர் நாகராஜன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story