கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரானாவுக்கு தாசில்தார் பலி புதிதாக 423 பேருக்கு தொற்று உறுதி


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்  கொரானாவுக்கு தாசில்தார் பலி புதிதாக 423 பேருக்கு தொற்று உறுதி
x
தினத்தந்தி 23 May 2021 11:12 PM IST (Updated: 23 May 2021 11:12 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரானாவுக்கு தாசில்தார் பலி புதிதாக 423 பேருக்கு தொற்று உறுதி

கள்ளக்குறிச்சி


தாசில்தார்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 17 ஆயிரத்து 832 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 14 ஆயிரத்து 760 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 121 பேர் சிகிச்சை பலனின்றி உயிழந்துள்ளனர். 
இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சின்னசேலம் தாலுகா தனி தாசில்தார் பாண்டியன் (வயது 55) நேற்று மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 122-ஆக உயர்ந்தது.

423 பேருக்கு உறுதி
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என 1,305 பேரின் உமிழ்நீர் பரிசோதனை முடிவு நேற்று வெளியானது. இதில் 423 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 17 ஆயிரத்து 832-ல் இருந்து 18 ஆயிரத்து 255-ஆக உயர்ந்துள்ளது. 


Next Story