ஒரே நாளில் 217 பேருக்கு கொரோனா
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 217 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் கொரோனா பாதித்த முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 217 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் கொரோனா பாதித்த முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
217 பேருக்கு கொரோனா
இதில் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற பரிசோதனையில் இதுவரை இல்லாத அளவில் 149 பேருக்கு தொற்று இருப்பதை கண்டறிந்தனர். மற்றவர்களுக்கு தனியார் பரிசோதனை நிலையங்களில் உறுதி செய்யப்பட்டது.
முதியவர் பலி
மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை, மற்றும் வீட்டு தனிமையில் உள்ளவர்கள் உள்பட 1,605 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒரே நாளில் 120 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.
Related Tags :
Next Story