குமரியில் கொரோனா பலி 800-ஐ நெருங்கியது


குமரியில் கொரோனா பலி 800-ஐ நெருங்கியது
x
தினத்தந்தி 23 May 2021 11:43 PM IST (Updated: 23 May 2021 11:43 PM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 800-ஐ நெருங்கியது. புதிதாக 1,189 பேர் பாதிக்கப்பட்டனர்.

நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 800-ஐ நெருங்கியது. புதிதாக 1,189 பேர் பாதிக்கப்பட்டனர்.
கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் தற்போது பரவி வரும் கொரோனா 2-வது அலை தமிழகத்தை மட்டுமல்லாது குமரி மாவட்டத்தையும் உலுக்கி வருகிறது. குமரி மாவட்டத்தில் கொரோனா தினசரி பாதிப்பு கடந்த சில நாட்களாக ஆயிரத்தை தாண்டியே உள்ளது. 
அதன் தொடர்ச்சியாக மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,189 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். இதில் அதிகபட்சமாக நாகர்கோவிலில் மட்டும் 319 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதேபோல் அகஸ்தீஸ்வரத்தில் 142 பேர், கிள்ளியூர்-74, குருந்தன்கோடு-119, மேல்புறம்-44, முன்சிறை-67, ராஜாக்கமங்கலம்-76, திருவட்டார்-131, தோவாளை-105 மற்றும் தக்கலை-104 பேர் பாதிக்கப்பட்டு உள்ளார்கள்.
மேலும் தூத்துக்குடியில் இருந்து வந்த 4 பேருக்கும், திருநெல்வேலியில் இருந்து வந்த 2 பேருக்கும், கேரளா மற்றும் திண்டுகல்லில் இருந்து வந்த தலா ஒருவர் என மொத்தம் 2 பேருக்கும் தொற்று உறுதியாகி இருக்கிறது. இவர்களில் நோய்த்தொற்று குறைவாக உள்ளவர்கள் வீடுகளிலும், தொற்று அதிகம் உள்ளவர்கள் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
21 பேர் பலி
மேலும் பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 21 பேர் உயிரை கொரோனா பறித்துள்ளது. இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 784 ஆக உயர்ந்துள்ளது. அதாவது குமரி மாவட்டத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 800-ஐ நெருங்கி உள்ளது.

Next Story