திருச்சியில் கொரோனாவுக்கு 13 பேர் பலி புதிதாக 1,407 பேருக்கு பாதிப்பு
திருச்சியில் கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 13 பேர் பலியாகினர். புதிதாக 1,407 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருச்சி,
திருச்சியில் கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 13 பேர் பலியாகினர். புதிதாக 1,407 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு
திருச்சி மாவட்டத்தில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினந்தோறும் சராசரியாக ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.
நோயின் தீவிரம் காரணமாக பலர் உயிரிழந்தும் வருகிறார்கள். முககவசம் அணியாமல் வெளியே சுற்றுதல், சமூக இடைவெளியை கடைபிடிக்காதது போன்ற பல்வேறு காரணங்களால் கொரோனாவின் வேகம் தீவிரமடைந்து வருகிறது.
13 பேர் பலி
இந்தநிலையில் திருச்சி மாவட்டத்தில் இதுவரை 46 ஆயிரத்து 762 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று புதிதாக 1,407 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது வரை 11 ஆயிரத்து 143 பேர் திருச்சி அரசு மருத்துவமனை மற்றும் தனிமை முகாம்களில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்று மட்டும் 1,226 தொற்றிலிருந்து குணமடைந்து அரசு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினர்.
இதற்கிடையே நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 13 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம் இதுவரை திருச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்தஎண்ணிக்கை 438 ஆக உள்ளது.
Related Tags :
Next Story