கும்பகோணத்தில் உணவாக போகும் மீனுக்கு ஆக்சிஜன் செலுத்தி விற்பனை
உயிருக்கு போராடும் மனிதனுக்கு ஆக்சிஜன் கிடைக்காத நேரத்தில், கும்பகோணத்தில் உணவாக போகும் மீனுக்கு ஆக்சிஜன் செலுத்தி விற்பனை செய்யப்படுகிறது. இதனை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
கும்பகோணம்:
உயிருக்கு போராடும் மனிதனுக்கு ஆக்சிஜன் கிடைக்காத நேரத்தில், கும்பகோணத்தில் உணவாக போகும் மீனுக்கு ஆக்சிஜன் செலுத்தி விற்பனை செய்யப்படுகிறது. இதனை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
ஆக்சிஜன் பற்றாக்குறை
நாடு முழுவதும் கொரோனா தொற்று மிகவும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நாளுக்கு நாள் பல்லாயிரகணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பெரும்பாலும் மனிதர்களின் உயிரிழப்பு ஆக்சிஜன் பற்றாக்குறையால் நடக்கிறது. இதனால் அரசு தமிழகம் முழுவதும் ஆக்சிஜன் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. மேலும் வெளிநாடுகளில் இருந்து விமானம் மற்றும் கப்பல்கள் மூலம் ஆக்சிஜன் கொண்டு வரப்படுகிறது.
மீனுக்கு ஆக்சிஜன் செலுத்தி விற்பனை
கும்பகோணம் பகுதியில் குளம், பண்ணை மூலம் மீன்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு வளர்க்கப்படும் மீன்கள் உயிருடன் விற்பனைக்கு எடுத்து வரப்படுகின்றன. அந்த மீன்கள் உயிருடன் இருந்தால் பொதுமக்கள் அதிகளவில் வாங்கி செல்வார்கள். இதற்காக தண்ணீர் வெளியேறாத தகரத்தில் உயிருள்ள மீன்களை போட்டு, அந்த மீன்கள் உயிருடன் இருப்பதற்காக ஆக்சிஜன் சிலிண்டர் வைக்கப்பட்டு அதிலிருந்து ஒரு குழாய் மூலம் தண்ணீருக்குள் செலுத்தப்படுகிறது. அவ்வாறு தண்ணீருக்குள் ஆக்சிஜன் செலுத்துவதன் மூலம் அதில் உள்ள மீன்கள் உயிருடன் நீந்தி செல்கிறது.
பொதுமக்கள் ஆச்சரியம்
இதனால் பொதுமக்கள் உயிர் மீன்களை அதிகளவில் வாங்கி செல்கின்றனர். தற்போது கொரோனா பாதிப்பினால், சிகிச்சை பெற்று வருபவர்கள் பலர் ஆக்சிஜன் கிடைக்காமல் உயிருக்கு போராடும் நேரத்தில் உணவாகப்போகும் மீன்களுக்கு ஆக்சிஜன் செலுத்தி விற்பனை செய்து வருவதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
Related Tags :
Next Story