ஓசூர் அருகே கர்நாடக எல்லை மதுக்கடைகளில் குவிந்த மதுப்பிரியர்கள் - பெட்டி, பெட்டியாக பாட்டில்களை வாங்கி சென்றனர்


ஓசூர் அருகே கர்நாடக எல்லை மதுக்கடைகளில் குவிந்த மதுப்பிரியர்கள் - பெட்டி, பெட்டியாக பாட்டில்களை வாங்கி சென்றனர்
x
தினத்தந்தி 24 May 2021 1:46 AM IST (Updated: 24 May 2021 2:01 AM IST)
t-max-icont-min-icon

ஓசூர் அருகே கர்நாடக எல்லை மதுக்கடைகளில் பெட்டி, பெட்டியாக பாட்டில்களை மதுப்பிரியர்கள் வாங்கி சென்றனர்.

ஓசூர்,

கர்நாடக மாநிலத்தில் நேற்று காலை 6 மணி முதல் 10 மணி வரை மதுக்கடைகள் செயல்படும் என்று அந்த மாநில அரசு அறிவித்தது. தற்போது தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி, பள்ளூர், ரிங் ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள மதுக்கடைகளுக்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த மதுப்பிரியர்கள் படையெடுத்தனர். 

தமிழகத்தில் ஒரு வாரத்துக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழக மதுப்பிரியர்கள் தங்களுக்கு பிடித்தமான மதுபாட்டில்களை நீண்ட வரிசையில் காத்திருந்து அதிகளவில் வாங்கிச் சென்றனர். ஒரு சிலர் சாக்குப்பைகளில் மதுபாட்டில்களை வாங்கி சென்றதை காணமுடிந்தது.  

மேலும் ஓசூர் மற்றும் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த மதுப்பிரியர்களும் ஓசூரில் இருந்து சில கி.மீட்டர் தொலைவில் உள்ள கர்நாடக எல்லைக்கு இருசக்கர வாகனங்களில் சென்று அங்குள்ள மதுக்கடைகளில் தங்களுக்கு தேவையான மதுபாட்டில்களை பெட்டி, பெட்டியாக வாங்கி சென்றனர். இதனால் கர்நாடக மாநில மதுக்கடைகளில் விற்பனை படுஜோராக நடந்தது.

Next Story